சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழை தொடரும்
Updated On :30 ஆகஸ்ட் 2021, 7:09 am

DIN

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் செப் 1இல் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆகஸ்ட் 31 வரை அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.