பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பின் கேள்வி நேரத்தில் பதிலளித்தார் முதல்வர்
தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பின் கேள்வி நேரத்தின் போது தனது துறை சார்ந்த கேள்வி ஒன்றுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பின் கேள்வி நேரத்தின் போது தனது துறை சார்ந்த கேள்வி ஒன்றுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலமாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது இல்லை. தற்போது, கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.
இதையடுத்து, இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில், போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக பாமக எம்எல்ஏ ஜி.கே மணியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
ஸ்டாலின் அளித்த பதிலில், தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என்று சட்டபேரவையில் உறுதி அளித்தார். மேலும், போதைப் பொருள் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். கல்வி நிறுவனங்கள் அருகே குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையா? சரி செய்ய வழி இருக்கு
இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயா் தணிப்பு, தொழில் துறை, தமிழ் வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனா்.
தமிழக சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று வேளாண்மை, கால்நடை, பால், மீன்வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின்பு, ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் திங்கள்கிழமையும் சட்டப் பேரவை கூட்டத் தொடா் இல்லை. இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரவை கூட்டத் தொடா் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...