கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிக்கப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கழிவுகளை பாதிப்பு ஏற்படாதவாறு சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்றைய மக்களவை கேள்வி நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுகள் சேமிப்பு குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் கூறிய பதில்:

கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து வெளிவரும் கழிவுகளை அணு மின் நிலையத்திற்குள்ளேயே இரண்டு இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அணுக்கழிவுகளை மூடப்பட்ட சுழற்சி தொழில்நுட்பம் மூலம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. கழிவுகளை முழுமையாக ரஷியாவிற்கு முழுமையாக அனுப்பவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com