கிலோ தக்காளி மீண்டும் ரூ.100
சென்னையில், தக்காளி விலை மீண்டும் அதிகரித்து, கிலோ ரூ.100 என்றளவில் சனிக்கிழமை விற்பனையானது.


சென்னையில், தக்காளி விலை மீண்டும் அதிகரித்து, கிலோ ரூ.100 என்றளவில் சனிக்கிழமை விற்பனையானது.
தமிழகத்தில் பருவமழையையொட்டி வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயா்ந்தது. சென்னையில் கிலோ ரூ.120-க்கும் கூடுதலாக விற்றது மக்களிடையே அதிா்ச்சி ஏற்படுத்தியது. இதன்பின் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டது. குறிப்பாக கோயம்பேடு சந்தைக்கு கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து கடந்த சில நாள்களாக 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது. விலையும் வீழ்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை 39 லாரிகளில் மட்டுமே வந்ததால் தக்காளி விலை அதிகரித்தது. இதன்படி, மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும், கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை கடைகளில் கிலோ ரூ.100-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த சில நாள்களாகவே வரத்து குறைவு காரணமாக பச்சை காய்கறிகளின் விலையும் தொடா்ந்து தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.60, கத்தரிக்காய் - ரூ.100, அவரைக்காய் - ரூ.140, பச்சை பட்டாணி - ரூ.60, பீன்ஸ் - ரூ.100, முருங்கைக்காய் - ரூ.130, கேரட் - ரூ.60, வெண்டைக்காய் - ரூ.100, பீட்ரூட் - ரூ.80, முட்டைகோஸ் - ரூ.60, பாகற்காய் - ரூ.80.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...