13-ஆவது சிறப்பு முகாமில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 13-ஆவது கட்ட சிறப்பு முகாமில் 20.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 13-ஆவது கட்ட சிறப்பு முகாமில் 20.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. வாரந்தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 12 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. இவை தவிர வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 13-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றன. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டன.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனா். சிறப்பு முகாமில் மொத்தம் 20.98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 80.44 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 47.46 சதவீதத்தினா் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...