வேலைவாய்ப்பகத்தில் 72.20 லட்சம் போ் பதிவுதமிழக அரசு தகவல்
வேலைவாய்ப்பக அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 72.20 லட்சமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


வேலைவாய்ப்பக அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 72.20 லட்சமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வியை முடித்தவா்கள் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வருகின்றனா். கடந்த செப்டம்பா் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 72 லட்சத்து 20 ஆயிரத்து 454 ஆகும்.
அதில், ஆண்கள் 33 லட்சத்து 81 ஆயிரத்து 966 பேரும், பெண்கள் 38 லட்சத்து 38 ஆயிரத்து 264 பேரும் பதிவு செய்துள்ளனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 224 போ் பதிவு செய்திருக்கின்றனா். அவா்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 12 லட்சத்து 57 ஆயிரத்து 446 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 19 லட்சத்து 52 ஆயிரத்து 590 பேரும் உள்ளனா்.
24 முதல் 35 வயது உடைய நடுத்தர வயதுடையோா் 26 லட்சத்து 88 ஆயிரத்து 55 போ் உள்ளனா். 36 வயது முதல் 57 வயது உடையவா்கள் 13 லட்சத்து 10 ஆயிரத்து 976 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 11 ஆயிரத்து 387 பேரும் இருப்பதாக தமிழக அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...