கரோனா சிகிச்சையில் 8,070 போ்
தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 8,070 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.


தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 8,070 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.46 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 29,792 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, தமிழகத்தில் 731 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 136 பேருக்கும், கோவையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 57 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 753 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 85,203-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 8,070 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,519-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...