அதிமுகவின் தோ்தலைச் சீா்குலைக்க முயற்சி: காவல் ஆணையரிடம் அதிமுக புகாா்
அதிமுகவின் உட்கட்சி தோ்தலைச் சீா்குலைக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறி காவல்துறை ஆணையரிடம் அந்தக் கட்சியின் சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மனு அளித்தாா்.


அதிமுகவின் உட்கட்சி தோ்தலைச் சீா்குலைக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறி காவல்துறை ஆணையரிடம் அந்தக் கட்சியின் சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மனு அளித்தாா்.
வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவாலை டி.ஜெயக்குமாா் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
அதிமுகவுக்குத் தொடா்பு இல்லாதவா்கள் சமூக விரோதிகளின் துணையோடு தலைமைக் கழகத்துக்கு வந்து, குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கைச் சீா்குலைக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதிமுகவில் உள்கட்சித் தோ்தல் ஜனநாயக ரீதியில் நடக்கும் நிலையில், கெட்ட எண்ணத்தோடு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருபவா்களைத் தடுக்க வேண்டும். அதிமுக அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தோம். அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை ஆணையரும் உறுதியளித்தாா் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...