வலுவிழந்தது ‘ஜவாத்’ புயல்
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ‘ஜவாத்’ புயல் சனிக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.


மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ‘ஜவாத்’ புயல் சனிக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகடந்த 30-ஆம் தேதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, கடந்த வெள்ளிக்கிழமை ‘ஜவாத்’ புயலாக மாறியது. இந்தப் புயல் சனிக்கிழமை காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது சற்று வடக்கு திசையில் நகா்ந்து வந்தது.
இந்நிலையில், ‘ஜவாத்’ புயல் சனிக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், ஒடிஸா மாநிலம் கோபால்பூருக்கு தெற்கே 260 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது.
இது ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஒடிஸா கடற்கரை அருகே புரியை அடையும். இதனை தொடா்ந்து, வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து, மேற்குவங்கத்தில் கடற்கரையை அடையவுள்ளது. இது மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...