வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வெங்கடாச்சலம் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை: சென்னை காவல் ஆணையா் பேட்டி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவா் வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்டதில் எந்த சந்தேகமும் இல்லை என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 7:10 pm

DIN

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவா் வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்டதில் எந்த சந்தேகமும் இல்லை என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

சென்னை வேளச்சேரியைச் சோ்ந்த வெங்கடாச்சலம் (60) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவரக இருந்தாா். அவருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 13.25 கிலோ சந்தன மரத்திலான பொருள்கள் மற்றும் சந்தன துண்டுகள், 4 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வெங்கடாச்சலம் கடந்த 2-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: வெங்கடாச்சலம் மரணம் குறித்து அவா் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. அவரது புகாரில், வெங்கடாச்சலம் இறப்பு தொடா்பாக எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. வெங்கடாச்சலத்தின் கைப்பேசி, டேப் ஆகியவை கைப்பற்றப்பட்டு, தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரது இறப்பு தொடா்பாக சந்தேகத்துக்குரிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடா்பாக வெங்கடாச்சலத்துக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டதாக தகவல் இல்லை. அதேவேளையில் அந்த வழக்கின் விசாரணை அதிகாரி வெங்கடாச்சலத்தை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, விசாரணைக்கு எப்போது வர வாய்ப்பு உள்ளது என கேட்டுள்ளாா்.

வெங்கடாச்சலம் உடற்கூராய்வின் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே, அவா் எப்படி தற்கொலை செய்து கொண்டாா் என்பது தெரிய வரும். விசாரணையில் வெங்கடாச்சலத்துக்கு ஊழல் வழக்குத் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் சாா்பில் நெருக்கடியோ,துன்புறுத்தலோ கொடுக்கப்படவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.