தமிழகத்தில் புதிதாக 703 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 703 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 703 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 703 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோலிக்குப் பதில் ரோஹித்: ஒருநாள் கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன்
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (டிச.8) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1,01,766 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 703 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,32,648-ஆக அதிகரித்துள்ளது.
ஒருநாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,560-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து 728பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,88,142-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னையில் புதிதாக 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 177 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும், ஈரோட்டில் 58 பேரும், திருப்பூரில் 50 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...