திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை: போக்குவரத்துத் துறை

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2021, 3:52 am

DIN

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி கல்லூரி, பள்ளி மாணவர்கள் செல்லும் காட்சிகள் அன்றாடும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தொடர்ந்து ஆட்சியர்களும், அதிகாரிகளும் மாணவர்களை சந்தித்து அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

“அரசுப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகளை கட்டாயம் நிறுத்தி அனைவரையும் ஏற்றிச் செல்ல வேண்டும். பயணிகள் ஏறுவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்த பின், அனைவரும் ஏறிய பின்னே பேருந்தை இயக்க வேண்டும்.

மேலும், வழக்கத்தைவிட பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.