மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் நண்பர்: ரஜினிக்கு தமிழக முதல்வர் புகழாரம்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News image
ரஜினிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
Updated On :12 டிசம்பர் 2021, 6:41 am

DIN

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பிறந்தநாள், அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், "உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "ரஜினிகாந்த்
நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும் அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த்க்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.