எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? மாநாடு பட வழக்கு குறித்து சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 12:12 pm

DIN

மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநா் வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்து அண்மையில் வெளியான படம் மாநாடு. இதில் சிலம்பரசன், கல்யாணி பிரியதா்ஷன், எஸ். ஜே. சூா்யா, எஸ். ஏ. சந்திரசேகா், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோா் நடித்துள்ளனா். மாநாடு படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையைத் தனியாா் தொலைக்காட்சிக்கு விற்றதை எதிா்த்து நடிகா் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தா் சென்னை 20-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். 

அந்த மனுவில், திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளா் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், தானும், தன் மனைவியும் படம் வெளியாகப் பெரு முயற்சி எடுத்தோம். இப்படி இருக்கும்போது தங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தில் தொலைக்காட்சி உரிமை தனியாா் தொலைக்காட்சிக்கு வழங்க முயற்சிகள் நடக்கின்றன. தங்களுக்கு சேர வேண்டியத் தொகையை கொடுக்கும்வரை தொலைக்காட்சி உரிமையை இறுதி செய்ய தடைவிதிக்கவும், பணத்தை தர பைனான்சியா் உத்தம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜீவபாண்டியன், இந்த மனுவுக்கு பைனான்சியா் உத்தம்சந்த், தயாரிப்பாளா் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இந்த நிலையில் மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்டிவிட்டரில், வெற்றிக் கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலை சூடியிருக்கிறது... கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா??? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா.... இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.