நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு

வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image

வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு

Updated On :15 டிசம்பர் 2021, 8:02 am

DIN


வேலூர்: வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையின் தரைதள பக்கவாட்டுச் சுவரில் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் துளையிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலையில் கடையை திறந்து பார்த்தபோது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப் போன நகைகளின் மதிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.