முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம்: அமைச்சர் பேட்டி

நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

அன்பில் மகேஷ் (கோப்புப் படம்)

Published On :28 ஜனவரி 2024, 11:13 am IST

நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தரமற்ற கட்டடங்கள் இடிக்கப்படும்பட்சத்தில், பள்ளிகள் நடத்த இடம் இல்லாத நிலையில், வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.