சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழகத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா; 697 குணமடைந்தனர்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 6 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :20 டிசம்பர் 2021, 2:38 pm

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 605 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 6 பேர் உயிரிழந்தனர். 

நேற்று 610 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

படிக்கபேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் உறுதி
 
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை திங்கள் கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,01,237 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 605 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,40,411-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,686-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக  697 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,96,553-ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு

சென்னையில் புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 5,60,459-ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 98 பேருக்கும், ஈரோட்டில் 53 பேருக்கும், செங்கல்பட்டில் 45 பேருக்கும்,  திருப்பூரில் 43 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.