

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிய போது பள்ளி வளாகத்திலேயே உடல் கருகிய நிலையில் சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தாண்டிக்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக டிஜிபு சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.