சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவை தெற்கு தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என தொகுதி மக்களிடம் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழக அரசால் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக கோவை தெற்கு தொகுதிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் வரையறைகளுக்கு உட்பட்டு கீழ்கண்ட பணிகளை நிறைவேற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1. தமிழக அரசால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள், அங்கன்வாடி, மதிய உணவு மையம், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள்.
2. ஆதிதிராவிடர், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், மனநலம் பாதித்த சிறுவர்களுக்கு உபகரணங்கள் வாங்குவது,
3. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவது,
4. உயர்மின் கோபுர விளக்குகள், தார், கப்பி சாலைகள், விதிமுறைக்கு உட்பட்டு அமைப்பது,
5. மாநில போக்குவரத்துத் துறைக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை செய்வது,
6. அரசு திட்டத்தால் 31-12-2000- வரை கட்டப்பட்ட வீடுகள் மற்றும் இந்திரா ஆவாஸ் யோஜனா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளையும் பழுதுபார்க்கவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவும்.