காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுச்சேரியில் திடீர் மழை: புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்குமா?

புதுச்சேரியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீர் மழை பெய்ய தொடங்கி பெய்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2021, 9:45 am

DIN


தமிழகம், புதுச்சேரியில் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீர் மழை பெய்ய தொடங்கி பெய்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரமாக பரவலாக பெய்து வருகிறது.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பாடு செய்துள்ள கட்டமைப்புகள், இந்த மழையால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுற்றுலாவுக்கு வந்துள்ள பயணிகள், பொதுமக்கள் திடீர் மழையால் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து இரு தினங்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.