
சசிகலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தமது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக டிஜிபியிடம் அதிமுக அமைச்சர்கள் புகாரளித்துள்ளனர்.
சட்டப் பேரவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் டிஜிபி அலுவலகம் சென்று புகாரளித்தனர்.
அதிமுக கொடியை மீண்டும் பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா டிசம்பர் 31-ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில், அவர் சென்ற காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டது.
இதற்கு அப்போது அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் பொதுச்செயலாளர் என்ற பெயரில் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
அமமுக கட்சி தொடங்கப்பட்ட நிலையில், அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமையில்லை என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.