தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை வட்டாரத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு

கடந்த மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கடலை, சோளம், உளுந்து உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் நாசம் ஆயின.

News image

விராலிமலை வட்டாரத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு

Updated On :4 பிப்ரவரி 2021, 6:42 am

DIN

விராலிமலை: கடந்த மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையால் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கடலை, சோளம், உளுந்து உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் நாசம் ஆயின.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள் சேதமான பயிர்களை கணக்கீடு செய்து மத்திய அரசுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மண்டல மேலாளர் ரணஞ்சே சிங், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் ஷுபம் கார்க் உள்ளிட்ட மத்தியக் குழுவினர் களமாவூர் சீத்தப்பட்டி பகுதி விவசாய நிலங்களை ஆய்வு மேற்கொண்டனர்.

Story image

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட வேளாண்மை துறையினர், விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநர் டி. ராமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தொடர்ந்து இந்த மத்தியக் குழுவினர் மேலூர் ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து மத்தியக் குழுவினர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.