மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல்லடம்: உழவர் உழைப்பாளர் கட்சியினர் சாலை மறியல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் சாலை மறியல்
Updated On :6 பிப்ரவரி 2021, 9:21 am

DIN

பல்லடம்: மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் அக்கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அக்கட்சி மாநில நிர்வாகிகள் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகிகள் வாவிபாளையம் சோமசுந்தரம், ஈஸ்வரன், பொங்கலூர் நடராஜ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.