மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை 'கூட்டணி': பிரேமலதா விஜயகாந்த்

தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை 'கூட்டணி' என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2021, 7:05 am

DIN

தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை 'கூட்டணி' என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவான கட்சிதான் தேமுதிக. ஆனால், நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் கட்சியைக் கூட்டணிக்கு கொண்டு சென்றுவிட்டனர். எனக்கும் சரி, கேப்டனுக்கும் சரி கூட்டணியில் உடன்பாடு இல்லை. தமிழில் பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு' என்று கேப்டன் கூறுவார். எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை 'கூட்டணி'. 

தலைவர் கேப்டன் முதல்வராக வேண்டும். நாம் வெற்றி என்ற இலக்கை அடைய வேண்டும். தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல, தனியாக களம் காண முடியும் என்று ஏற்கெனவே நிரூபித்தவர்கள். கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக் கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கிறார்கள். எனவே, நாம் யாருக்கும் காத்திருக்கத் தேவையில்லை. 

இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார். இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.