டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. 

News image
Gold prices rise by Rs 136 in Chennai
Updated On :11 பிப்ரவரி 2021, 6:19 am

DIN

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்தது. தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.36,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 குறைந்து, ரூ.4,506 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 பைசா குறைந்து, ரூ.72.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து, ரூ.72,900 ஆகவும் விற்கப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,506

1 சவரன் தங்கம்...............................36,048

1 கிராம் வெள்ளி.............................72.90

1 கிலோ வெள்ளி............................72,900

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,522

1 சவரன் தங்கம்...............................36,176

1 கிராம் வெள்ளி.............................74.40

1 கிலோ வெள்ளி.............................74,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.