36 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம்
சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து ஒரு சவரன் ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து ஒரு சவரன் ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்தது. தற்போது விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
அந்தவகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,483 ஆக விற்பனையாகிறது.
அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.73,500 ஆகவும் உள்ளது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,483
1 சவரன் தங்கம்...............................35,864
1 கிராம் வெள்ளி.............................73.50
1 கிலோ வெள்ளி.............................73,500
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,524
1 சவரன் தங்கம்...............................36,192
1 கிராம் வெள்ளி.............................73.70
1 கிலோ வெள்ளி............................73,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...