ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிப்.24 முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்

வரும் பிப்.24ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 5:08 am

DIN

வரும் பிப்.24ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சியினர், தலைமைக்கழகத்தில் வரும் 24 புதன்கிழமை முதல் மார்ச் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.  விருப்ப மனுவுக்கு தமிழகத்தில் ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5,000, கேரளத்தில் ரூ.2,000 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.