காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ராஜகம்பீரத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 20 நாள்களாக நெல் மூடைகளுடன் ஏராளமான விவசாயிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
ராஜகம்பீரத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிப்பு
Updated On :16 பிப்ரவரி 2021, 9:15 am

DIN

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 20 நாள்களாக நெல் மூடைகளுடன் ஏராளமான விவசாயிகள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் கடந்தாண்டு கொள்முதல் நிலையம் செய்யப்பட்ட கட்டடத்தின் முன்பு விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூடைகளுடன் கடந்த  20 நாள்களாக காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது.

கடந்த ஆண்டு ராஜகம்பீரத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள் முன்பு விவசாயிகள் பல நாள்களாக நெல் மூடைகளுடன் காத்துக் கிடந்து நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். 

ராஜகம்பீரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கடந்தாண்டு இங்கு கொள்முதல் நிலையம்  செயல்பட்ட கட்டடத்தின் முன்பு அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.

பிற இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும்  ராஜகம்பீரத்தில் மட்டும் இதுவரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து நெல் கொள்முதல் நிலையம் முன்பு காத்துக்கிடக்கும்  விவசாயிகள் கூறுகையில், ராஜகம்பீரத்தில்கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் 20 நாட்களுக்கு மேலாக கடந்தாண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட கட்டடத்தின் முன்பு நெல் மூடைகளுடன் காத்துக் கிடக்கிறோம். ஆனால் இதுவரை திறக்கப்படுவதற்கான நடவடிக்கை இல்லை. 

இதனால் நெல் மூடைகள் வெயிலில் காய்ந்து வருகின்றன .இதன் காரணமாக நெல் மூடைகளின்  எடை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து ராஜகம்பீரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.