தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் திடீர் ராஜிநாமா

புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.ஜான்குமார் செவ்வாய்க்கிழமை காலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.

News image

புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் திடீர் ராஜிநாமா

Updated On :16 பிப்ரவரி 2021, 6:34 am

DIN


புதுச்சேரி: புதுவை காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.ஜான்குமார் செவ்வாய்க்கிழமை காலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.

 2016 இல் நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற அவர் முதல்வர் நாராயணசாமிக்காக அத்தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதில் இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமியும் வெற்றி பெற்றார்.

ஜான்குமாருக்கு புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது. பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம் எம்பியாக தேர்வானதால் காலியான காமராஜர் நகர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜான்குமார் எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில் அதிருப்தியில் இருந்த ஜான்குமார் இருமாதங்களுக்கு முன்பு பாஜக புதுவை பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை சந்தித்து பேசினார். இப்போது திடீரென எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். நாளை ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருக்கும் நிலையில் ஜான்குமார் ராஜிநாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் புதுவை பேரவையில் ஆளும்கட்சி ஆதரவு 14, எதிர்கட்சிகள் பலம் 14 என சமநிலையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.