ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெள்ளக்கோவிலில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

News image
வெள்ளக்கோவிலில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
Updated On :16 பிப்ரவரி 2021, 9:20 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

முத்தூர் சாலையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன் தலைமை வகித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார். 

வெள்ளக்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் வி.கந்தசாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகரச் செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மொத்தம் 129 நபர்களுக்கு இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு துண்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன.  அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன் உள்ளிட்டோர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.