காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருச்சியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் வியாழக்கிழமை தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். 

News image
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated On :18 பிப்ரவரி 2021, 10:07 am

DIN


திருச்சி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் வியாழக்கிழமை தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் வியாழக்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்‌. இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திருச்சி - கரூர் புறவழிச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.