காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சாலை விரிவாக்க பணிக்குக் குளத்திலிருந்து நீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருச்சி - புதுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக குண்டூர் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :19 பிப்ரவரி 2021, 9:00 am

DIN

திருச்சி - புதுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக குண்டூர் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்வரும் சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்காது என்பதால் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

Story image

இந்த நிலையில் இன்று காலை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஒப்பந்ததாரர்கள் டீசல் மோட்டார் வைத்து நீர் எடுக்கும் பணியை மேற்கொண்டனர். இதை அறிந்த விவசாயிகள் தண்ணீர் எடுக்க வந்த லாரிகளை சிறைபிடித்தும், அதிகாரிகளை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி தண்ணீர் எடுக்க மாட்டார்கள் என உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.