தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர்: ராஜ்நாத் சிங்

ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Updated On :21 பிப்ரவரி 2021, 12:51 pm

DIN

ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாஜக இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் என்ற பெயரில் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ''சேலம் - சென்னை விரைவு சாலை திட்டப் பணிகள் 2021-22-ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது.

கரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது. ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.

நாட்டினை நிர்மாணிப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது. 
நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தையும் வேகமாக வளர்கிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.