ஆளுநர் மாளிகை செல்கிறார் நாராயணசாமி
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அரசு கவிழ்ந்ததை அடுத்து, ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார் நாராயணசாமி.

ஆளுநர் மாளிகை செல்கிறார் நாராயணசாமி

ஆளுநர் மாளிகை செல்கிறார் நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அரசு கவிழ்ந்ததை அடுத்து, ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார் நாராயணசாமி.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய நாராயணசாமி, மத்திய பாஜக மற்றும் புதுச்சேரி எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறியதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இதனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்க, நாராயணசாமி சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...