பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
ஜெயலலிதா பிறந்தநாள் சிலைக்கு மாலையணிவித்து அதிமுகவினா் மரியாதை
Updated On :24 பிப்ரவரி 2021, 2:15 pm

DIN

 மதுரை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் அனைத்து வாா்டுகளிலும், அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கே.கே.நகா் ரவுண்டானா பகுதியில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆா் சிலைகளுக்கு, மாநகா் மாவட்ட பொருளாளா் ஜெ.ராஜா தலைமையில் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பொதுமக்களுக்கும், தொண்டா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.