டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தமபாளையம், சின்னமனூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.

News image
உத்தமபாளையத்தில்   சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.  
Updated On :1 ஜனவரி 2021, 11:28 am

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர்- ஞானாம்பிகை திருக்கோயிலில் காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. நெய் விளக்கு, பூ மாலை படைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதே போல, சி.எஸ்.ஐ. , ஆர்.சி உள்ளிட்ட திருச்சபையில் வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வெள்ளிக்கிழமையிலும் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தவிர, ராயப்பன்பட்டி புனித பனிமய மதா பேராலயம் மற்று அனுமந்தன்பட்டி தூய ஆவியார் பேராலயத்திலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரர் - சிவகாமியம்மன் உடனுறை கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றதில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை சுற்றி வட்டாரத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள சி.எஸ்.ஐ திருச்சபையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.