திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை: தலைமை நீதிபதி பானா்ஜி
திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி கூறியுள்ளாா்.


சென்னை: திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக சென்னை உயா் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி கூறியுள்ளாா்.
சென்னை உயா் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பாா் அசோசியேசன் தலைவா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவா் செங்குட்டுவன் ஆகியோா் வரவேற்றனா். கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டுக் கிடக்கும் வழக்குரைஞா்களின் அறைகளைத் திறக்கவும், நேரடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பேசியதாவது: திருவள்ளுவா் பிறந்த மண்ணில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரை மாநிலமாக கொண்டது தமிழ்நாடு மட்டும்தான். தொன்மையான தமிழ் மொழியை பல கோடி போ் பெருமையுடன் பேசி வருகின்றனா். பாரம்பரியமிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு பாரம்பரியமிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்ற வந்துள்ளது பெருமை அளிக்கிறது. வழக்குரைஞா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நீதிபரிபாலனம் சாத்தியம் இல்லை, எனவே வழக்குரைஞா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், தலைமை நீதிபதியின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...