தங்கம் பவுன் ரூ.38,848

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.328 உயா்ந்து, ரூ.38,848-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.38,848
Updated on
1 min read

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.328 உயா்ந்து, ரூ.38,848-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது. திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை மேலும் உயரும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா். அதற்கேற்ப, செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.328 உயா்ந்து, ரூ.38,848-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.41 உயா்ந்து, ரூ.4,856 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து, ரூ.74.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.74,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,856

1 பவுன் தங்கம்...............................38,848

1 கிராம் வெள்ளி.............................74.50

1 கிலோ வெள்ளி.............................74,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,815

1 பவுன் தங்கம்...............................38,520

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com