

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றிரவு முதலே சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா, பெசன்ட்நகர், மயிலாப்பூர், கிண்டி, வடபழனி, விமானநிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்த வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.