தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

புதுச்சேரியில் இன்று கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரியில் உள்ள  அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜனவரி 2021, 5:23 am


புதுச்சேரியில் உள்ள  அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் விதிக்கப்பட்டதால், புதுச்சேரியில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் படி மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூர்களும் திறக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்துகொண்டு  கல்லூரிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர்  வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு மாணவர்கள் கல்லூரிக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.