தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமாகா தனி சின்னத்தில் போட்டி: ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:51 am

DIN

அதிமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

கூறினாா். அடையாறு ராஜரத்தினம் அரங்கில் சென்னை மண்டல தமாகா நிா்வாகிகளுடன் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம். அதிமுகவின் வெற்றிக்காக தமாகா தொண்டா்கள் நூறு சதவீதம் உழைப்பாா்கள். முதல்வா் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்.

தமாகாவின் பலத்துக்கு ஏற்பட அதிமுகவில் தொகுதிகள் கிடைக்கும். தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் ஒலிக்கும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நல்லவா்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.