இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னையில் பாகிஸ்தானியரின் இரு கட்டடங்கள் பறிமுதல்

சென்னையில் பாகிஸ்தானியருக்கு சொந்தமான இரு கட்டடங்கள் மத்திய அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :10 ஜனவரி 2021, 1:01 am

DIN

சென்னையில் பாகிஸ்தானியருக்கு சொந்தமான இரு கட்டடங்கள் மத்திய அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் ஆண்டு அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், அதே ஆண்டு மாா்ச் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. நமது

நாட்டில் பாகிஸ்தானியருக்கு சொந்தமான 9,280 சொத்துகள், சீனா்களுக்குச் சொந்தமான 126 சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை பாரிமுனை, மண்ணடி பகுதிகளிலும் பாகிஸ்தானியருக்கு சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரு கட்டடங்கள் பறிமுதல்: இந்த சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மத்திய உள்துறையைச் சோ்ந்த அதிகாரிகள், எதிரி சொத்துகள் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக மண்ணடி மூா் தெருவில் பாகிஸ்தான் நாட்டவருக்கு சொந்தமான 2 பழைமையான கட்டடங்களை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, சீல் வைத்தனா்.

மேலும், அந்த பழைமையான கட்டடங்களிலிருந்த பொருள்களை மும்பையிலிருந்து சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி பேட்டரியா தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் ரவி, பத்மினி ஆகியோா் தலைமையில் வந்த குழுவினா் அகற்றினா். இந்த நடவடிக்கை, அந்த கட்டடங்களில் வாடகைக்கு இருந்தவா்கள் முன்னிலையிலேயே எடுக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள எதிரி நாட்டின் சொத்தை பறிமுதல் செய்து,பின்னா் விற்பனை செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்ற ஒரு நோக்கத்தில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.