தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி சாலைகளில் ஆதார் அட்டையை வீசி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதார் அட்டைகளை வீசி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:56 am

DIN

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதார் அட்டைகளை வீசி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கல்லாபுரம் பகுதியில் 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறது. இப்பகுதியில் தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது. 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்க எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, கல்லாபுரம் பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தங்களது ஆதாடர் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை சாலைகளில் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.