தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை
தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை
Updated on
1 min read

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அப்துல் கனி (35).   இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தார். இவரைப் பின் தொடர்ந்து வந்த கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அஷ்ரப் அலி (40) அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அப்துல் கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக அஷ்ரப் அலியை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com