தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொடர் மழை: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் அணையின்  நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.

News image

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழை ஒரே நாளில் 4 அடி நீர்மட்டம் உயர்வு

Updated On :14 ஜனவரி 2021, 5:25 am

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் அணையின்  நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.25 அடியாகவும், அணைக்கு நீர் இருப்பு 3,074 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,315 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 700 கனஅடியாகவும் இருந்தது.

அன்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.40 அடி உயரமாகவும், அணைக்குள் நீர் இருப்பு 3,920 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 10 ஆயிரத்து 707 கன அடியாகவும் இருந்தது.

ஒரே நாளில் முல்லைப் பெரியாறு அணைக்குள்  நீர் வரத்து அதிகம் காரணமாக அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 8000 கன அடி தண்ணீர் வினாடிக்கு அணைக்குள் வரத்து வந்துள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தற்போது நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.