நாகை அருகே மழை நிவாரணம் கோரி வயலில் கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமாகி உள்ளன. 
நாகை அருகே மழை நிவாரணம் கோரி வயலில் கருப்பு கொடிகளுடன் போராடும் விவசாயிகள்.
நாகை அருகே மழை நிவாரணம் கோரி வயலில் கருப்பு கொடிகளுடன் போராடும் விவசாயிகள்.


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 85 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமாகி உள்ளன. 

இந்த நிலையில், பயிர் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி  நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் வலுத்து வருகிறது. 

இதன்படி,  நாகையை அடுத்த வடகுடி கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சேதமான நெற்பயிர்களுக்கு மழை நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மழையால் சேதமான நெல் வயலில் இறங்கி கருப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பயிர் பாதிப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாதிக்கபட்ட பகுதிகளை ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகளை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாத அரசு அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com