முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

சேலம் மாவட்டம் காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகள் திறப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலை திறப்பு விழா

Published On :

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காருவள்ளியில் எம்.ஜி.ஆர், அண்ணா சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் சேரன் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலையை திறந்து வைத்தார். பின்னர் , மலர் தூவி மரியாதை செலுத்திய , எம்.எல்.ஏ. வெற்றிவேல், கட்சியின் அடிமட்டத் தொண்டரும் உயர் பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, கோவிந்தராஜ், காடையாம்பட்டி ஒன்றியக் குழுத் தலைவர் மாரியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.