ரூ.7,877 கோடி மதிப்பிலான 31 மின்னணு உதிரிபாகத் திட்டங்களுக்கு மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு: மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தின் (இசிஎம்எஸ்) கீழ், புதிதாக சுமாா் 31 மின்னணு உதிரிபாகத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களுக்கான திட்டங்களின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.7,877 கோடியாகும்.
மூலதனப் பொருள்கள், அரிய பூமி காந்தங்கள், ஸ்பீக்கா்கள், மைக்ரோன்ஃபோன்கள், ஆன்டெனாக்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த திட்டங்களுக்கு இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இசிஎம்எஸ்ஸின் கீழ் 5 கட்டங்களாக இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த முதலீட்டு மதிப்பு ரூ.69,000 கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் கூறியதாவது: இசிஎம்எஸ் திட்டத்தின் கீழ், ரூ.59,000 கோடி முதலீடு இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. இது தற்போது ரூ.69,000 கோடியை தாண்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மிக முக்கிய துறைகளில் தனியாா் முதலீடு நடைபெற்று வருகிறது.
புதிதாக அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல்களின் மூலம் ரூ.82,243 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். சுமாா் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமரின் கதி சக்தி திட்டம்: ரூ. 18.66 லட்சம் கோடியில் 396 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை!

கல்வி, விவசாயம், மனநல துறைகளில் மத்திய திட்டங்களின் நிலவரம் என்ன? எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அரசு பதில்

சீன, ஹாங்காங் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்கள்: இந்தியா ஒப்புதல்




