ஜெயலலிதா நினைவிடம் ஜன. 27-இல் திறப்பு

​மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்படவுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் ஜன. 27-இல் திறப்பு


சென்னையிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி காலை 11 மணியளவில் திறக்கப்படவுள்ளது.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார். 

சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ஜெயலலிதா வாழ்ந்த - அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ள போயஸ் தோட்ட இல்லமும் அன்றைய தினமே மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. முழுவீச்சில் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது பொதுப் பணித் துறை.

வரும் 27-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்படும் தினத்தில் நினைவிடம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com