நாமக்கல்: நாமக்கல்லில் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14,41,201 வாக்காளர்கள் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கா.மெகராஜ் புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
இதில், ஆண்கள் 701104 பேர், பெண்கள் 739937 பேர், இதரர் 160 பேர் என 14,41,201 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 1623 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.
இறுதி பட்டியல் வெளியீட்டில் 39357 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 24039 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பட்டியல் வெளியீட்டின் போது அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனித வெள்ளி - தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


